WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 3, 2016

கல்லூரி திறப்பு தேதியில் குழப்பம் அதிகாரபூர்வ உத்தரவு தாமதம்.

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறப்பு தேதி, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 83 அரசு கல்லுாரிகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கலை, அறிவியல் கல்லுாரிகள், ஜூன் 8ம் தேதி திறக்க உள்ளதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்களில், நேற்று தகவல் வெளியான நிலையில், 'இன்னும் அதிகாரபூர்வ உத்தரவு, அரசிடமிருந்து வரவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அரசிடமிருந்து அதிகாரபூர்வ உத்தரவு வரும் வரை, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை மட்டும் நடத்தி, நிர்வாக பணிகளை கவனிக்குமாறு, கல்லுாரி முதல்வர்களை, இயக்குனரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கல்லுாரி திறப்பு தேதி, இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகாததால், மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.