WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 15, 2016

ஜூன் 20ல் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு : 17ல் தர வரிசை.


:'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. தர வரிசை பட்டியல், ஜூன், 17ல் வெளியிடப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண், நேற்று வெளியிடப்பட்டது. இவற்றை வெளியிட்டு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 26 ஆயிரத்து, 17 விண்ணப்பங்கள் வந்தன; 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.மாநில ஒதுக்கீட்டிற்கு, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 2,253 இடங்கள்; ஆறு சுயநிதி கல்லுாரிகளில் இருந்து, 470; இரண்டு இ.எஸ்.ஐ., கல்லுாரிகளில் இருந்தும், 130 இடங்கள் என, 2,853 இடங்கள் உள்ளன. விண்ணப்பித்தோருக்கான தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியிடப்படும். முதற்கட்ட கலந்தாய்வு, 20ம் தேதி துவங்கும். பலர் ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தால் தாவரவியல், விலங்கியல், வேதியியல் பாட மதிப்பெண்கள்; பின், நான்காவது விருப்ப பாட மதிப்பெண்; பிறந்த தேதி பார்க்கப்படும். அதிலும், ஒரே நிலை இருந்தால் பயன்படுத்த, சம வாய்ப்பு எண் எனப்படும், 'ரேண்டம்' எண் தரப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.