அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆகஸ்ட், 21ல், டீட் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.
அண்ணா
பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 650 ரூபாய்க்கான டி.டி.யுடன் அனுப்ப வேண்டும். எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,க்கு மட்டும், தொலைநிலை கல்வி தகுதித் தேர்வான, டீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பங்களை ஆக., 10க்குள் அனுப்ப வேண்டும்; ஆக., 21ல் நுழைவுத் தேர்வு நடக்கும்.
எம்.எஸ்சி., கம்ப்யூ., சயின்ஸ் படிப்புக்கு, செப்., 3 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என, தொலைநிலைக் கல்விப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.