WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 29, 2016

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.

மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன்
முடிகிறது. தனியார் மெட்ரிக் பள்ளிகள், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. ஆனால், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், 10 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாமல் பழமையாக உள்ளதால், மாணவர்கள், அகில இந்திய போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் உள்ளது. மேலும், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் பள்ளிகளை நடத்த, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற வேண்டும். இதற்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளையுடன் முடிகிறது. இதற்கிடையில், இந்த பள்ளிகளுக்கு, தமிழக அரசின் தடையில்லா சான்று கிடைப்பதில் பிரச்னை உள்ளதாக, தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.