WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 29, 2016

திருப்புவனம் அருகே “கூட்டல், பெருக்கல்” வேலையில் மாணவர்கள் கவனிக்குமா கல்வித்துறை?


திருப்புவனம் அருகே மாணவர்களை வைத்து பள்ளியை சுத்தம் செய்ய வைக்கும் கொடுமை நடக்கிறது. திருப்புவனம் அருகில் மடப்புரம் உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலை பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் படித்து
வருகின்றனர். இப்பள்ளியில் 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் காலையில் சீக்கிரமாக பள்ளிக்கு வந்து வாசலை சுத்தம் செய்து, தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் பள்ளிக்கூட வாசலை பெருக்கி, நீர் தெளித்து வருகின்றனர். இதனால் பள்ளியில் உள்ள கழிவறைகளையும் மாணவர்கள் தான் சுத்தம் செய்கின்றனரோ என்ற சந்தேகம் அப்பகுதிமக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து தங்களது பெற்றோரிடம் மாணவர்கள் தகவல் தெரிவிக்க மறுக்கின்றனர். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மாணவர்களை சுத்தம் செய்யும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவது குறித்து சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.