சிபிஎஸ்இ க்கு இணையான பாடத் திட்டத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
நாடு முழுவதும் 22 ஐஐடிக்களில் உள்ள சுமார் 10,000 இடங்களுக்கான நுழைவுத் தேர்வில் 31 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 60 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தைப் படித்தவர்கள். ஆனால், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த 16,430 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதனால், 12 மாநிலங்களின் பாடத் திட்டங்களில் தமிழ்நாடு பாடத் திட்டம் 0.2 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.  இதற்கு தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டம் சிந்திக்கும் திறனைத் தூண்டுவதாக இல்லாமல், மனப் பாடத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதே முதன்மையான காரணமாகும். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் வினாக்கள் எழுப்பப்படும். ஆனால் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் புத்தகத்தில் ஒரு வினா எப்படித் தரப்பட்டிருக்கிறதோ அதிலிருந்து ஒரு வார்த்தையை மாற்றிக் கேட்டால்கூட அதற்கு மாணவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இப்படியான பாடத் திட்டத்தால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனால்கூட தேசிய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது. ஆகவே, தமிழகத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையான பாடத் திட்டத்தை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை இப்போதே நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.