WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 6, 2016

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு ’ரிசல்ட்’ இழுபறி.


தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிந்து, ஓராண்டு ஆகியும், இன்று வரை அதற்கான முடிவுகள் வராததால் தேர்வு எழுதியவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். தமிழக பள்ளிகளில், ஆய்வக 
உதவியாளர் பணியிடங்களுக்கு, 1983 வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையில், வேலை வழங்கப்பட்டது. 2015ல், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 10ம் வகுப்பு வெற்றி பெற்றவர்கள், இதற்கான தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு மே, 31ல் நடந்த தேர்வில், 4,362 பணியிடங்களுக்கு, எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதினர். ஒரு மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது, ஓராண்டு கடந்தும் இன்று வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் விரக்தியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.