WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 11, 2016

இணையதளத்தில் பதிவு செய்தால் பாடநூல்கள் வீடு தேடி வரும்.


பள்ளிப் பாட நூல்களை இணையதளத்தில் பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பும் வசதியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்துள்ளது. 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பாட நூல்களை பள்ளிகளே
மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. இதுதவிர, www.textbookcorp.in என்ற இணையதளத்தில் பதிவும் செய்யலாம். இதுதவிர, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் தேவைப்படும் பாட நூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அடுத்த 48 மணி நேரத்துக்குள் பணம் செலுத்தியவரின் வீட்டு முகவரிக்கு கூரியர் சேவை மூலம் பாட நூல்கள் அனுப்பி வைக்கப்படும். இ-சேவை மைய முகவரி விவரங்களும் பாட நூல் நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.