WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 11, 2016

10-ம் வகுப்பு: ஜூன் 13, 14-ல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 13 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். மார்ச் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வெழுதாதவர்கள் (Absentees) தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.125/-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500/-ம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-ம் என மொத்தம் ரூ.675/- வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.