WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 18, 2016

பஸ் பாஸ்' விண்ணப்பங்கள் தருவதில் தாமதம்.


மாணவர்களின் புகைப்படங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, போக்குவரத்து கழகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் பஸ்
பாஸ் வழங்கப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பஸ் பாஸை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ் பாஸுக்கான விண்ணப்பங்களை போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, பள்ளிகள் பெற்று செல்கின்றன. விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலமும் பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், மாணவர்களின் புகைப்படத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், போக்குவரத்து கழகங்களுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு, பள்ளி மாணவர்களிடம் இருந்து, 3.80 லட்சம் விண்ணப்பங்கள் வர வேண்டும். ஆனால், 5,000 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இதே நிலையே, மற்ற போக்குவரத்து கழகங்களிலும் நீடிக்கிறது. இந்த நிலை நீடித்தால், கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பஸ் பாஸ் தயாரிக்கும் பணி முடிய பல மாதங்களாகும். ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வது போல, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும், ஆன்லைன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு அனுப்பினால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பஸ் பாஸ் நிலவரம் போக்குவரத்து கழகம் பஸ் பாஸ் எண்ணிக்கை (லட்சத்தில்) சென்னை மாநகர் 4.23 விழுப்புரம் 5.27 சேலம் 3.65 கோவை 4.10 கும்பகோணம் 6.41 மதுரை 4.70 நெல்லை 2.75 ஜூலை, 31க்குள் அனைத்து விண்ணப்பங்களையும் வழங்கி விடும்படி, கூறியுள்ளோம். இப்பணி விரைவுப்படுத்தப்படும். 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் பெறுவது பற்றி, அடுத்த ஆண்டில் பரிசீலிப்போம். போக்குவரத்து கழக அதிகாரி

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.