பள்ளி திறந்த முதல் நாளான நேற்று, பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, நேற்று, பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி
திறக்கும் முன், பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவற்றை முறையாக கடைபிடித்துள்ளார்களா என்பதை கண்டறிய, அனைத்து பள்ளிகளிலும் நேரில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் உள்ளிட்டோர் பங்கேற்று, பள்ளியில் ஆசிரியர் வருகை, மாணவர் எண்ணிக்கை, வழங்கப்பட்ட பாடப்புத்தக விவரம், சீருடைகள் எண்ணிக்கை, பள்ளி வளாக தூய்மை, மின் சாதனங்களின் பாதுகாப்பு, கட்டடங்களின் பாதுகாப்பு தன்மை, வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை, ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, ஆய்வு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரத்யேக படிவத்தில் பூர்த்தி செய்து, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.