WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 2, 2016

பிளஸ் 2 மறு மதிப்பீடுக்கு இரண்டு நாள் அவகாசம்.


பிளஸ் 2 தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 17ல் வெளியாயின. இந்த தேர்வில், மதிப்பெண் குறைந்த மாணவர்கள், தங்கள் விடைத்தாளை ஆய்வு செய்வதற்காக, விடைத்தாள் நகல் வழங்கப்படுகிறது. இதற்காக
விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று முதல், scan.tndge.in என்ற இணையதள முகவரியில், விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நகல்களை பார்த்து, அதில் விடைகளுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களை மாணவர்கள் ஆய்வு செய்யலாம். விடைத்தாளில் மதிப்பெண்களை கூட்டி, மொத்தமாக பதிவு செய்ததில் தவறுகள் இருந்தால், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். சரியான விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்காமலோ, குறைத்து வழங்கியிருந்தாலோ மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், scan.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின் அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து, நாளை மற்றும் நாளை மறுநாள் மாலை, 5:00 மணிக்குள், தங்கள் பகுதி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தையும், முதன்மைக் கல்வி அலுவலகத்திலேயே செலுத்தலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.