WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 2, 2016

37 அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனம் எப்போது? ஜூன் 6-இல் மாணவர் சேர்க்கை.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வருகிற 6-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், 37 அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடம் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2016-17 ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இவற்றில் சில கல்லூரிகள் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்கி விட்ட நிலையில், பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வருகிற 6-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், பல கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாமல் இருப்பதால், கல்லூரிகள் திறக்கப்படும் நேரத்தில் நிர்வாக முடிவுகள் எடுப்பதிலும், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான பரிந்துரையை செய்வதிலும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சிவராமன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 79 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் முதல்வர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக 33 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கெனவே 4 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. எனவே, மொத்தம் 37 அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. மாணவர் சேர்க்கை நடைபெறும் இந்த நேரத்தில், கல்லூரியில் முதல்வர்கள் இல்லாமல் இருப்பது, நிர்வாக முடிவுகளை எடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, முதல்வர் பணியிடங்களையும், 6 மண்டல இணை இயக்குநர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.