WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 2, 2016

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சென்றடைந்துவிட்டதா? உறுதி செய்துகொள்ள ஏற்பாடு.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை இணையதளம் மூலம் உறுதி செய்துகொள்ளலாம். சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org-இல் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ள மாணவர்கள், சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 மதிப்பெண், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண்டு ஆகியவற்றைப் பூர்த்தி செய்து விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்... சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கடந்த மே 26-ஆம் தேதி முதல் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் புதன்கிழமை (ஜூன் 1) 1,414 பேர் விண்ணப்பத்தைப் பெற்றனர். இதுவரை மொத்தம் 20,638 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். சுகாதாரத் துறையின் இணையதளம் மூலம் 675 பேர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். 4,264 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு: வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வரும் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை 4,264 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.