WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 4, 2016

ஆகஸ்ட் 11-ல் தமிழக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்தல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்துதல், 8-வது ஊதிய மாற்றத்திற்கான குழு அமைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு இ-மெயில் அனுப்பவேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். தொகுப்பூதியம் - தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, வருமானவரி உச்சவரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும்போது, தமிழகத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.