கணினி கல்வி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில்உள்ளது.
இந்திய அளவில் கணினி கல்வி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கேரளாவில் 49% குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளார்.
2016ஆம் ஆண்டிற்கான கல்வி அறிக் கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட் டது.
இதன்படி, இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளனர். மாநில அளவில் 49 சதவீதத்தினர், அதாவது 39.17 இலட்சம் குடும்பங்களில் ஒருவருக்கு கணினி அறிவு இருப்பதால் கேரளா கணினி கல்வியறிவில் நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கேரளாவை அடுத்து பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47%மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம்,அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் :
கேரள மாநிலத்திற்க்கு முன்னோடியாக 2011ஆம் ஆண்டு தமிழக அரசுப்பள்ளியில் கணினிக்கல்வி தொடங்கியது நம் தமிழகம் தான் .
காரணம்:
தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2011 ஆம் கல்வியாண்டில் கணினிக் கல்வியில் 6 ,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம்,அதற்கான பாடப்புத்தகங்கள்,கணினி மற்றும் கணினியை சார்ந்த உபகரணங்களும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது போதிலும் காரணம் ஏதுமின்றி அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது. சில மாதத்தில் கணினி அறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது.
தற்போது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம் தரப்பட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் கல்வி கட்டாய பாடமாக உள்ளது.
ஆனால் கணினி அறிவியல் பாடத்தை முதன்முதலில் அறிமுகம் செய்த நாம் அதனை சிறப்பாக செயபடுத்த முடியவில்லை.
அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடம் இன்று வரை மாணவர்களுக்கு முறையாக கொண்டு செல்லவில்லை .
தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குறியது.
மத்தியரசின் மூலம் கிடைக்க பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கொண்டு செல்ல மாநில அரசும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெ.குமரேசன்,வெ.குமரேசன்,மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.