Monday, July 4, 2016
சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடிக்கான அரசாணை வெளியீடு.
தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றதும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதையடுத்து, கடன் தள்ளுபடி தொடர்பாக கடந்த மாதம் 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்த விரிவான நெறிமுறைகள் கொண்ட அரசாணையை கூட்டுறவுத்துறை செயலாளர் தற்போது வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையில் நிலம் உள்ள விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 2.5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ளவர்களின் கடன்களும் தளளுபடி செய்யப்படும். மேலும் பயிர்க்கடனுக்கான அசல், வட்டி மற்றும் அபராத வட்டி ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
விவசாயிகள் நகை மூலம் பெற்ற கடன் தொகையை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தினால் தள்ளுபடி செய்யப்படும். கிரிமினல் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால் அவர்களின் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.
பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அரசின் உதவி என்பது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.