WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 22, 2016

'குரூப் 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 1' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணை கலெக்டர், டி.எஸ்.பி.,
மற்றும் உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில், 74 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பணியிடம் நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலை, 10ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதற்கான முதன்மை எழுத்து தேர்வு, வரும், 29, 30 மற்றும், 31ம் தேதிகளில், சென்னையில், 38 தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வாணைய இணையதளங்கள், www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகியவற்றி-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களுக்கு, 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது, contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.