WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 21, 2016

பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்.


ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது. இந்தாண்டில் கலந்தாய்வு விதிமுறையில் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. இதன்படி 1.6.2016க்கு முன் பணியேற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டு கலந்தாய்வு ஆகஸ்டில் தான் நடந்தது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் 1.6.2016க்கு பின் தான் பணியேற்றனர். இந்த விதியால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது: புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் நடக்கவுள்ள கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. 1.6.2015ல் கலந்தாய்வு நடந்திருந்தால் இந்த விதிமுறை சரியாக இருக்கும். ஆனால் ஆகஸ்டில் தான் கலந்தாய்வு நடந்தது.மேலும் சென்றாண்டு தலைமையாசிரியர்களாக பதிவு உயர்வு பெற்றவர்களுக்கும் கலந்தாய்வில் எவ்வித தளர்வும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு இதுவும் ஏமாற்றமான விஷயம் தான். சம்பந்தப்பட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு வந்து அனைவரும் பங்கேற்க கல்வித்துறை வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் இக்கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் மற்றும் ஆசிரியர் பணியிடங்களையும் வெளியிட்டு கலந்தாய்வில் சேர்க்கப்பட வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.