WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 21, 2016

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு.


பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in/ என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலாகவே பார்க்கலாம். தேர்வரின் பெயர், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜூலை, 25 முதல், 27 வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள எண்ணை பயன்படுத்தியே, மறுகூட்டல் முடிவை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.