WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 13, 2016

கலந்தாய்வில் இடமாறுதல் : ஆசிரியர்களுக்கு புது நிபந்தனைகுறைந்தது 6 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும், என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும், என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்காக மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடக்க கல்வித்துறையில் மாவட்ட அளவிலான பணி நிரவல் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவோர் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படுவர். தற்போது வெளியிடப்பட்ட புதிய அரசாணையில், மாவட்டம் விட்டு மாவட்ட இடமாறுதல் செய்யப்பட்ட பிறகே பதவி உயர்வு வழங்கப்படும். பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும். மேலும் கடந்த ஆண்டில் பணியிட மாறுதல் பெற்றவர்கள் இந்த ஆண்டு மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.