கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக 100 உதவி விற்பனை யாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிலை
யங்களில் உதவி விற்பனையாளர் பணியில் 100 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப் பட உள்ளன. இப்பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக் கலாம். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 33 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

உதவி விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு வோர் விண்ணப்ப படிவத்தை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் (www.cooptex.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண் ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்தை விண்ணப்பக் கட்டணத்துக் கான டிமாண்ட் டிராப்ட் மற்றும் இதர ஆவணங்களுடன் ஜூலை 25-ம் தேதிக்குள் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்துக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை, பணி நியமனம், இடஒதுக்கீடு வாரியாக காலியிடங்கள் உள்ளிட்டவை தொடர்பான கூடுதல் விவரங் களை கோ-ஆப்டெக்ஸ் இணைய தளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். உதவி விற்பனை யாளர் பணிக்கு தேர்வுசெய்யப் படுவோருக்கு சம்பளம் ரூ.11,500 வழங்கப்படும். அதோடு வருங்கால வைப்புநிதி (இபிஎப்), பணிக்கொடை உள்ளிட்ட இதர சலுகைகளும் உண்டு. இந்த தகவல் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் மற்றும் இதர ஆவணங்களுடன் ஜூலை 25-ம் தேதிக்குள் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்துக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.