மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர் டிஓ) 233 விஞ்ஞானி, இன்ஜினீயர்
பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஏரோநாட் டிக்கல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இந்த காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ஆன்லைனில் (www.ras.gov.in) விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங் களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதேபோல், ரிசர்வ் வங்கியின் சார்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் நிறுவனத்தில் 120 தொழில்நுட்ப பணியாளர் (பயிற்சி) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமா படித்த வர்கள் இதற்கு விண்ணப்பிக்க லாம். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். ஜூலை 18-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.brbnmpl.co.in) விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏரோநாடிக்கல் குவாலிட்டி அஷ்யூ ரன்ஸ் நிறுவனத்தில் 60 முது நிலை அறிவியல் உதவியாளர் (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக் கல், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக் கல், உலோகவியல்) பணியிடங் களை நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபி எஸ்சி) அறிவிப்பு வெளியிட் டுள்ளது. இதற்கு ஜூலை 28-க்குள் ஆன்லைனில் (www.upsconline. nic.in) விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.