WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 30, 2016

ஆசிரியர் கலந்தாய்வு; ஆக., 6ல் துவக்கம்!.


ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, வரும்ஆக., 6ம்தேதி, துவங்குகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர்கள் பணிநிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆக., 6ம்தேதி, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு,
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் (ஒன்றியத்துக்குள்) பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, நடக்கிறது. வரும், 7ம்தேதி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, 13ம்தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, 14ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) கலந்தாய்வு நடக்கிறது. 20ம்தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடக்கிறது. 21ம்தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான (மாவட்டம் விட்டு மாவட்டம்) பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. ஆக., 6ம்தேதி, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்; 7ம்தேதி, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, 13ம்தேதி, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்; 20ம்தேதி, முதுகலை ஆசிரியர் மாவட்டத்துக்குள் இடமாறுதல், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு இடமாறுதல், 22ம்தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, 23ம்தேதி, உடற்கல்வி, இடைநிலை, தையல் ஆசிரியர் மாவட்டத்துக்குள் மாறுதல், 24ம்தேதி, உடற்கல்வி, இடைநிலை, தையல் ஆசிரியர் மாவட்டம் விட்டு இடமாறுதல், 27ம் தேதி முதல், 29ம் தேதி வரை, பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.