WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 30, 2016

தடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு.


தமிழக தடயவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணியில், 30 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.விருப்பமுள்ளவர்கள், முதுகலை படிப்பில், எம்.எஸ்சி., தடய அறிவியல், உயிரியல், வேதியியல் மற்றும்
இயற்பியல் ஆகியவற்றில், ஒரு பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியை ஓரளவு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத முன்னுரிமை வழங்கப்படும். அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், பெயர் விபரங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். பின், அதில் வழங்கப்படும் கடவு எண் மற்றும் ரகசிய குறியீடு எண் மூலம், ஆக., 28 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு, அக்., 16ம் தேதி காலை மற்றும் மாலையில், இரு தாள்களுக்கு எழுத்து தேர்வு நடக்கும். கூடுதல் விபரங்களை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.