WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 7, 2016

கல்வித்துறையில் பதவி உயர்வு.

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் 2 இணை இயக்குநர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மேனிலைக் கல்வி துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் பழனிசாமி. பள்ளிக் கல்வித்துறை பணியாளர் தொகுப்பின் இணை இயக்குநராக பணியாற்றி வருபவர் கருப்பசாமி. இவர்கள் இருவரும் தற்போது இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பதவி உயர்வு பெற்ற இருவருக்கும் பணியிடங்களையும் வழங்கி பள்ளிக் கல்வித்துைற நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராக கருப்பசாமியும், வயது வந்தோர் கல்வித்துறை இயக்குநராக பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை பள்ளிக் கல்வி–்த்துறை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.