இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு ஸ்மிருதி இராணி வகித்து வந்த மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டது. ஸ்மிருதி இராணிக்கு ஜவுளித் துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கே அதிக முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து மாநிலங்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறினார். கல்வித் துறையில் முக்கியக் கொள்கைகள் பற்றி தற்போது எதுவும் கூறுவதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.