WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 8, 2016

மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.


மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலும் மாற்றுத்
திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டு கல்வி உதவித் தொகையாக ரூ. 1,000-மும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலுவோருக்கு ரூ. 3 ஆயிரமும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நிலைகளில் பயிலுவோருக்கு ரூ. 4 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். பட்டப்படிப்பு உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரமும், முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ. 7 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நிலைகளில் பயிலுபவர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், பட்டப் படிப்புப் பயிலுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும், தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலுபவர்களுக்கு ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படும். இத்திட்ட உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை na‌g​a‌p​a‌t‌t‌i‌n​a‌m.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்தும் பெற்றும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.