WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 8, 2016

தமிழகத்தில் உயர்கல்வி முற்றிலுமாக முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.


தமிழகத்தில் உயர்கல்வி முற்றிலுமாக முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- உயர்கல்வி
மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் பெருமைப்படும் வேளையில், தமிழகத்தில் உயர்கல்வி முற்றிலுமாக முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் 3 பெரிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளும் காலியாக கிடப்பது தான் இதற்குக் காரணம் ஆகும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாண்டவன் கடந்த ஜனவரி 10&ம் தேதியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் கடந்த 9-4-2015 தேதியும் ஓய்வு பெற்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜா ராமின் பணிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இந்த 3 பல்கலைக்கழகங்கள் தான் தமிழகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் ஆகும். எனவே, இந்த விஷயத்தில் இனியும் தூங்கி வழியாமல் உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை தகுதியும், திறமையும் கொண்டவர்களைக் கொண்டு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.