அரசு மேல்நிலைப்பள்ளியில், படிக்கும் மாணவியர், எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில், அப்பள்ளியில் நர்சிங் தொழிற்கல்வி வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை
அருகேயுள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை வகுப்பில், 364 மாணவ மாணவியர் படிக்கின்றனர். கல்வித்தரம், விளையாட்டு என பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம் உள்ளது. கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பை முடித்து வெளியேறி செல்வதில் மாணவியரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவிர் பலரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்திருப்பதால், உயர்கல்விக்கு செல்லும் முன்பு, வேலைவாய்ப்பை தேடி செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலரும், உயர்கல்வியை தொடர முடியாமல் கல்வித்திறனை பிளஸ் 2 வகுப்புகளோடு, முடக்குகின்றனர். தவிர, பத்தாம் வகுப்பு முடித்தவர்களும், பிளஸ் 1, 2 படிப்பைத் தொடர்ந்து மேலும் மூன்றாண்டுகள் படிக்க வைத்த பின்னரே, உறுதியான வேலைவாய்ப்பை பெற முடியும் என்பதால், பத்தாம் வகுப்போடு அவர்களின் கல்விக்கு தடைவிதிக்கின்றனர். இங்கு, சுற்றுப்பகுதியிலுள்ள கிராமப்புற மாணவியர் பலரும் நர்சிங் படிப்பை தேர்ந்தெடுக்க ஆவலுடன் உள்ளனர். இப்பள்ளியில் அதற்கான வாய்ப்பு இல்லாததாலும், உடுமலை சுற்றுப்பகுதிலேயே எந்த அரசு பள்ளியிலும் இல்லாததால் மாணவியர் பிற மாவட்டத்துக்கு செல்ல வேண்டி வருகிறது. இதை காரணமாக முன் வைத்தே இங்குள்ள பலரது கல்வியும் தடைபட்டுள்ளது. இதனால், எதிர்வரும் ஆண்டுகளில் இப்பள்ளியில் படிக்கும் மாணவியரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் நர்சிங் பாடத்தை சேர்க்க வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.