தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட
ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை
இணை இயக்குநர் பாலமுருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பது: கடந்த ஆண்டு தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக அதிக தேர்ச்சியை வழங்குவோம் என ஆசிரியர்கள் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், அவை தேர்தல் வாக்குறுதிகளாக மாறிவிட்டன. தமிழகத்தில், தேர்ச்சியளவில் சேலம் மாவட்டம் 19-வது இடத்தில் உள்ளது.
தேர்ச்சியை அதிகரிக்க பல மாற்றங்களை அறிவுறுத்தினோம். அதை ஆசிரியர்கள் யாரும் பின்பற்றவில்லை. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. உங்களிடம் வரும் மாணவரை, 100 சதவீத மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்தவில்லை. 35 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வைக்க கூறுகிறோம். அதைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. அரசுப் பள்ளிகளில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், இடைநிற்றல் வரக்கூடாது என்பதற்காக ஆல் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், ஆசிரியர்கள் மாணவர்கள் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி என்று விட்டு விட்டனர். ஆல் பாஸ் என்பதற்காக ஆசிரியர்கள் யாரையும் கற்பிக்க வேண்டாம் எனக் கூறவில்லை.

இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், ஆய்வின்போது ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும்.
அதேபோல, வகுப்பறையை ஆர்வத்துடன் சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர்கள் முதல் கடமையாக நினைக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் காலை இரு வகுப்புகள், மாலை இரு வகுப்புகள் என கண்காணித்து, அந்த ஆசிரியர் நடத்தும் கற்பித்தல் முறையில் குறை இருப்பின் சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையில் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.