தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு
துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள், கடந்த பிப்., 10ல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் 10 நாட்கள் நீடித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பிப்., 19ல் வெளியிட்ட, 110வதுவிதியின் கீழான அறிவிப்பில், 'அரசு ஊழியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய, வல்லுனர் குழு அமைக்கப்படும்' என்று அறிவித்தார். இதனால், போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில், பிப்., 26ல்,குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, ஐந்து மாதங்கள் ஆகியும், இன்னும் அந்தக் குழு, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை.முதல்வர் ஜெயலலிதா, அரசு அலுவலர்களின் இந்த முக்கிய பிரச்னை குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடருவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.