WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 23, 2016

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கலா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் புலம்புகின்றனர். அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் பிற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 23.8.2010 முதல்14.11.2011 முடிய மற்றும் 15.11.2011 முதல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர். இவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தகுதியின்றி நியமனம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பட்டியலை பெற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும், என இடைநிலைக்கல்வி இணை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளார். இதனால், இதுவரை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.