WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 23, 2016

ஆசிரியர் பற்றாக்குறையால் வாரத்தில் இரு நாள் பாடம்.


ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வாரத்தில் இரு நாட்கள் பாடம் நடத்துவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுவதோடு, பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்குமா என்ற ஆதங்கத்தில் உள்ளனர். மல்லாங்கிணர்
அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 ல்200க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லை. இருக்கிற ஆசிரியர்களைக் கொண்டு கடமைக்கு பாடம் நடத்தி பொதுத் தேர்வை சந்தித்து வருவதால், மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களை எடுத்து வருகின்றனர். பெற்றோர் தரப்பில் போதிய ஆசிரியர்களை நியமிக்க முதல்வருக்கு மனு அளித்தும்,இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. இந்நிலையில் அருகில் உள்ள பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை பாடம் நடத்த கேட்டுக் கொண்டதால்,அவர்கள் வாரத்தில் இரு நாட்கள் வருவதோடு, பாடம் நடத்தாமல் இதுதான் தேர்வுக்கு வரும் படித்துக் கொள்ளுங்கள் என சொல்வதால் புரியாமல் எப்படி படிப்பது என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மற்ற பாடங்களைகூட படித்து விடலாம், இயற்பியல் பாடத்தை விளக்கம் கொடுக்காமல் எப்படி மனப்பாடம் செய்வது என, மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, போதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.