WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 23, 2016

பி.எட்., பட்டதாரிகளுக்கு ஊக்க ஊதியம்!.


இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்., பட்டதாரிகளுக்கு உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசுக்கு தொடக்கக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 
இனசுழற்சி முறையில் நியமிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் இடைநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து 1999ல் ஆதிதிராவிடர், பழங்குடியினரில் பி.எட்., பட்டதாரிகள் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து உயர்கல்விக்கு ஊதியம் உயர்வு வழங்க அரசுக்கு தொடக்கக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இதில் செலவு தொகை குறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனரிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதையடுத்து பணி நியமனம் அல்லது அதற்குபின் பட்டதாரி கல்வி தகுதிக்கு மேல் இருந்தால் உயர் கல்வியில் இரு ஊக்க ஊதிய உயர்வு கருத்தியலாகவும், 2016-17 கல்வியாண்டு முதல் பணப்பயன் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பலனுக்காக மட்டும் கருத்தியலாகவும் வழங்க தேவையான செலவு விபரத்தை கேட்டு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.