WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 23, 2016

கல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரியர்கள்.


தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை இக் காலியிடங்களை நிரப்ப, 2014ம் ஆண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் எழுதினர். தேர்வு எழுதி ஓராண்டு ஆனபின், கடந்த ஆண்டு, மே மாதம் தேர்வு முடிவு வெளியானது. இதில், 3,000 ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர். அடுத்த கட்டமாக இவர்கள் கடந்த ஆக., மாதம், சென்னையில் முதன்மைத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதி முடித்து, ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை. இந்த தேர்வு முடிவை எதிர்பார்த்து, 3,000 ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் விரைவாக முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி, பல மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.