WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 16, 2016

அரசு கல்லூரி பேராசிரியர் சங்கம் மவுனமாக இருந்தது ஏன்?

அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர்களின் பணிநிரவல் என்ற நாடக ஒத்திகையின் போது தமிழகத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு  ஆதரவாக அரசு கல்லூரி பேராசிரியர் சங்கம் குரல்
கொடுக்கவில்லை .அதற்கு  இது போன்ற ஒரு சில காரணங்கள் இருக்கலாம் என்று கௌரவ விரிவுரையாளர்கள் மத்தியில் பேசப் படுகிறது.

கொஞ்சம் பேருதான பாதிக்க பட போறங்க  .நாம கால முறை ஓய்வூதியம் அரசிடம் கேட்டு கொண்டு இருக்கோம் .இப்ப கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக ஸ்டிரைக் செய்தால்  ,அரசு நிரந்தர பேராசிரியர்களாகிய நமது கோரிக்கையை அரசு நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என எண்ணி மவுனமாக இருந்து விட்டார்கள் .
ஆனால் மீண்டும் இப்பொழுது ஒரு சில துறைகளில் அண்ணாமலை பேராசிரியர்கள் வர போவதாக பத்திரிக்கையின் வாயிலாக தகவல் கிடைத்துள்ளது.இப்பொழுது  உண்மையாக இது போன்ற அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர்களின் பணி நிரவல்(deputation) நடக்கும் பட்சத்தில் அரசு கல்லூரி பேராசிரியர் சங்கம் போராட வாய்ப்பு உள்ளது.ஏனெனில் மீண்டும் அண்ணாமலை யுனிவர்சிட்டி பேராசிரியர்களை அனுமதித்தால் இப்பொழுது பணிபுரிந்ந்து கொண்டிருக்கும் வயது முதிர்ச்சி அடைந்த பேராசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் பணியிடங்கள் , இணை இயக்குனர் (R J D)பணியிடங்கள் , பல்கலை கழக விடைத்தாள் திருத்தும் போது இருக்கும் Board chief பதவிகள்  பணி நிரவல் மூலம் வரும் அண்ணாமலை யுனிவர்சிட்டி பேராசிரியர்களுக்கு கிடைக்க நேரிடும் .எனவே கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக  இந்த முறை அரசு கல்லூரி பேராசிரியர்  சங்கம் களமிரங்கி போராட வாய்ப்பு இருக்கும் .

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.