தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் சுழற்சியில் 1623 பேரும் இரண்டாம் சுழற்சியில்1661 பேரும் என மொத்தம் 3284 கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.தமிழக அரசு மாணவர்களின்
எண்ணிக்கைக்கு இத்தனை பேராசிரியர்கள் தேவை எனவும் அதற்காக இவ்வளவு நிதி வேண்டும் என மத்திய அரசிடம் கூறி நிதியைப் பெற்றுக் கொண்டு ஒரு சிறு தொகையை கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளமாக வழங்கி வருகிறது.இதில் சம்பள உயர்வு அரசாணை வந்தும் இன்னும் பிப்ரவரி மாதம் பணிபுரிந்ததற்கு 13 நாள் மற்றும் மார்ச் மாதத்திற்கான 30 நாளுக்கான ஊதிய உயர்வுதொகை மொத்தம் 6700 ரூபாய் கடனாளியாக 3400 கௌரவ விரிவுரையாளர்களிடம் தமிழக அரசு உள்ளது. கடைசியாக மார்ச் மாதம் சம்பளம் வாங்கியதோடு சரி இன்னும் சம்பளம் போடலையாம்.இது வருட வருட தொடர்கதையாம் . சம்பளவு உயர்வு கேட்டு கோரிக்கை வைத்தால் அதாவது யு.ஜி.சி நிர்ணயித்துள்ள சம்பளம் 25000 தரும் அளவுக்கு அரசிடம் பணம் இல்லையாம்.அதனால் குறைந்த சம்பளம் 15000 தராங்களாம். ஆளும்அரசு 2011 தேர்தல் அறிக்கையில் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வேன் என வாக்குறுதி கொடுத்தது.அதனை அப்பவே மறந்து விட்டது அரசு .ஆனால் அம்மா சொன்னா செய்வாங்க னு மனம் தளராமால் கஷ்டபட்டு கொண்டு காலத்தை கடத்துகின்றனர் அப்பாவி கௌரவ விரிவுரையாளர்கள். மேலும் இவர்களின் பணி அனுபவ சான்று UPSC அறிவிக்கும் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் asst professor rank இருந்தா தான் பணி அனுபவம் செல்லுமாம்.Guest lecturer னு இருந்தா செல்லாது . இது போன்ற செய்தியால் கவுரவ விரிவுரையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.மேலும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை விதிவிளக்கின்றிஅனைத்து கல்லூரிகளின் கல்லூரி நிர்வாகமும் பஸ் பாஸ் , தேர்வுக் கட்டண வசுல் , admission duty , சினிமா டிக்கெட்(அரசியல் தலைவர் படம்) வசூல் என வசூல் செய்ய நிர்பந்திக்குதாம்.இந்த புகாரை எல்லாம் கல்லூரி கல்வி இயக்குனரகம் கண்டு கொள்வதில்லை.இதனையும் மீறி ஆர்வ மிகுதியால் அரசுக்கு புகார் அனுப்பினால் அதற்கு பதில் "இது அரசின் கொள்கை முடிவு உட்பட்டது" என பதில் நிச்சயம் வருதாம். இல்லையெனில் சம்பந்தமில்லாத பதில் வருதாம் இதை விட கொடுமை என்னவெனில் திருவள்ளுவர் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட ஓர் அரசு கல்லூரிகளில் பணிபுரிந்த நபரை 56 வயது உங்களுக்கு முடிந்துவிட்டது இனி கல்லூரிக்கு கௌரவ விரிவுரையாளராக பணியமர்த்த வேண்டாம் என கல்லூரி கல்வி இயக்குனர் கூறியதாக அக்கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.ஆனால் இது சம்பந்தமாக எழுத்து பூர்வமாக தகவல் தரப்படாது எனவும் கூறியுள்ளாராம்.கௌரவ விரிவுரையாளராக பணிபுரிய யு.ஜி.சி 62 வயது என நிர்ணயித்துள்ளதை அக்கல்லூரி ஏற்காதாம்.மேலும் அந்த கல்லூரிக்கு உட்பட்ட பல்கலை கழக பேராசிரியர்களின் ஒய்வு வயது 62 என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.கௌரவ விரிவுரையாளர்கள் கொத்தடிமைகளா இருப்பது எழுத படாத விதியாக உள்ளது.ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் கௌரவ விரிவுரையாளர்களை காக்க தவறி வருவது தமிழகத்தின் அவமானம்.ஊடக நண்பர்களிடம் இதனை பற்றி கூறினால் கூட்டம் சேர்த்து ஒழிக னு கோசம் போடுங்க அப்பதான் நியுஸ் போட முடியும் னு சொல்றாங்க .இந்த அவல நிலையை கண்டுக் கொள்வார்களா அரசியல் வேடதாரிகள்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.