WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 26, 2016

ஆராய்ச்சி அடிப்படையில் ஊதிய உயர்வு : பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி., 'செக்'.


கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையில் மட்டும், ஊதிய உயர்வை வழங்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.கல்லுாரி மற்றும்
பல்கலைகளின் பேராசிரியர்களில், அனுபவம் பெற்றவர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், அதிகபட்சம், 1.15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். அதே நேரம், கவுரவ விரிவுரையாளர்கள், 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். இந்நிலையில், கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களின் ஊதியம் தொடர்பான முடிவு எடுக்க, யு.ஜி.சி., தனிக்குழுவை அமைத்துள்ளது. இந்த குழு பல பரிந்துரைகளை வழங்கிஉள்ளது. அதன்படி, பேராசிரியர்களின் கல்வித்தகுதி, கற்பித்தல் திறன், ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, புதிய கண்டுபிடிப்புகள் அடிப்படையில், ஊதிய உயர்வை முடிவு செய்யலாம் என, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.இதுகுறித்த விதிகளை, யு.ஜி.சி., இணையத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து, செப்., 30க்குள் கருத்து தெரிவிக்கும்படி, பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களை, யு.ஜி.சி., கோரியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.