சென்னை மாநகராட்சி பள்ளிகளில், துப்புரவு பணி செய்யும் ஆயாக்களுக்கு இருக்கும் மரியாதைகூட, எங்களுக்கு இருப்பதில்லை' என, மழலையர் பள்ளி ஆசிரியைகள் கவலை தெரிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சியில், 170 பள்ளிகளில், மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. அந்த பள்ளிகளில்,
தொகுப்பு ஊதிய அடிப்படையில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். அதிகபட்சமாக மாதம், 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
ரூ.1 லட்சம் வரை...தற்காலிக பணி அடிப்படையில், ஆசிரியைகளை பணி நியமனம் செய்ய, கவுன்சிலர்களும், உதவி கல்வி அதிகாரிகளும், 50 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கியுள்ளனர். தற்போது, பணி நிரந்தரம் செய்ய, மேலும் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்திற்கு, மழலையர் பள்ளி ஆசிரியைகளை பணி நிரந்தரம் செய்யும் திட்டம் இல்லை. இந்த நிலையில், பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி, பணம் கேட்பதால், ஆசிரியைகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மேயரின் கவனத்திற்கு...மழலையர் பள்ளி ஆசிரியைகள் கூறியதாவது:எங்களுக்கு மேஜை, நாற்காலி, மதிய உணவருந்த இடம் என, எந்த கட்டமைப்பு வசதிகளையும், மாநகராட்சி கல்வித்துறை செய்து தரவில்லை. ஆனால், 5ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.பள்ளியில் துப்புரவு பணி செய்யும் ஆயாக்களுக்கு இருக்கும் மரியாதைகூட, எங்களுக்கு இல்லை.மழலையர் பள்ளிகளை அதிகம் துவங்கி, மாநகராட்சி வரலாற்றில், கல்வித்துறையில் தற்போது தான் பெரிய சாதனை நடக்கிறது என, பெருமை பேசும் மேயர் சைதை துரைசாமி, எங்களது பிரச்னைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது தான், மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளின் லட்சணம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.