Wednesday, July 27, 2016
எட்டாம் வகுப்பு மாணவருக்கு எழுத்துப்பிழைகள் வருகிறதா? : ஆய்வு நடத்த முடிவு.
தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. தற்போது 8ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் வாசிப்புத்திறன், கணிதத்தில் கூட்டல், கழித்தல் முறைகள் குறித்து ஆய்வு செய்ய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அதன்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் நலத்துறை பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 8ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்தல், எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகளை எழுதுதல் உள்ளிட்ட ஆய்வுகள் செய்யப்பட உள்ளன,’’ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.