பல்கலைகளில், 100 கல்லுாரிகளுக்கு மேல் இணைப்பு அந்தஸ்து வழங்குவதை தடை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தமிழகத்தில் அண்ணா பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலையை பிரிக்க
வேண்டிய சூழ்நிலை உருவாகிஉள்ளது.
தரமான கல்வி:தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மற்ற நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில், ஐந்து பேர் கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த கமிட்டியின் சார்பில், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, அதன் வரைவு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும், 100 கல்லுாரிகளுக்கு அதிகமாக இணைப்பு வழங்கியுள்ள பல்கலைகள் பிரிக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதே கருத்தை, பார்லிமென்டிலும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆறு பிரிவுகளாக...இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் அண்ணா பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை, குறைந்தது ஆறு பிரிவுகளாக பிரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அண்ணா பல்கலையில், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., - பி.ஆர்க்., - பி.பிளான்., - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., போன்ற படிப்புகளை கற்றுத்தரும், 631 கல்லுாரிகள் இணைப்பில் உள்ளன.
ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., மற்றும் எம்.பி.எட்., கற்றுத்தரும், 690 கல்லுாரிகள் உள்ளன. சென்னை, மதுரை காமராஜர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பாரதியார் பல்கலைகளில், 100 முதல், 150 வரையிலான கல்லுாரிகளே இணைப்பு பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.