WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 1, 2016

'ரேங்க்' பெற அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு.


பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 படிக்கின்றனர். அரசு பொது தேர்வுகளில், சில ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்' பெறுவதில்லை. மாறாக, தனியார் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடிக்கின்றனர்.வரும் கல்வியாண்டிலாவது ஒவ்வொரு மாவட்டமும், மாநில அளவில் ரேங்க் எடுக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் துவங்கும் நேரம், முடியும் நேரத்திற்கு முன், காலை, மாலை, 45 நிமிடங்கள் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வாரம் ஒரு முறை கட்டாய தேர்வு நடத்தவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.