Friday, August 5, 2016
அரசு ஐ.டி.ஐ.,யில் சேரஆக.16 வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஆக.,16க்குள், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்&' என, கிண்டி, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ஹேமலதா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,க்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வடசென்னை அரசு ஐ.டி.ஐ.,யில், ஆக., 29 முதல், 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், சேர விரும்புவோர், www.skilltraining.tn.gov.in என்ற, இணைய தளத்தில், ஆக.,16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் சேரலாம்.
மேலும், விபரங்களுக்கு, 94449 02522, 98411 12566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.