ஐ.ஐ.டி.,
மற்றும் அண்ணா பல்கலையில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான,
கேட் தேர்வுக்கு, வரும் 1ம்
தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
முதுநிலை
இன்ஜி., படிப்புகள் மற்றும்
எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., படிப்புகளில், ஐ.ஐ.டி., மற்றும்
அண்ணா பல்கலை உள்ளிட்ட நிறுவனங்களில் சேரவும், பெட்ரோலிய நிறுவனங்களில் உயர் அதிகாரி பணியினை
பெறவும், கேட் தேர்வில்
கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அடுத்த கேட் தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, செப்., 1ல்
துவங்கி அக்., 4ல்
முடிகிறது.பிப்ரவரி, 4, 5, 11 மற்றும், 12ம் தேதிகளில், கேட் தேர்வு நடக்கும். இந்த ஆண்டு உத்தரகண்ட்
மாநிலம், ரூர்க்கியில் உள்ள
ஐ.ஐ.டி., தேர்வை
நடத்துகிறது. தென் மாநில மாணவர்களுக்கு, சென்னை
ஐ.ஐ.டி., கேட் தேர்வு மண்டல
மையமாக செயல்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.