தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால், பி.எட் முடித்த, 45 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், வாய்ப்பின்றி, காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் மட்டும், 2,000ம் ஆண்டில் இருந்து, 45 ஆயிரம் பேர், பி.எட் முடித்துள்ளனர். இதுதவிர, காமராஜர், பாரதியார்
பல்கலைகளில் இருந்தும், பி.எட்., படித்து காத்திருப்போர் உள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில்,
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும், 55 ஆயிரம், கணினி
ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது. இதை நிரப்பாததால், தொழில்நுட்ப கல்வியில் மாணவர்கள் பின்தங்கும்
அபாயம் உள்ளது. மேலும், நடுநிலைப்பள்ளி
வகுப்புகளில் இருந்தே, கணினி கல்வி
கட்டாயமாக்கினால், அரசால்
வழங்கப்படும் இலவச லேப்-டாப்களை கல்விசார் பணிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்த வாய்ப்பு
கிடைக்கும்.
பி.எட்
கணினி ஆசிரியர் நலசங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் கூறுகையில், சமச்சீர் கல்வி அறிமுகமான போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கி, புத்தகங்கள் அச்சிடப்பட்டன. பின், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், கணினி கல்வி முடக்கப்பட்டது. இதை மீண்டும்
துவங்கினால், வேலைவாய்ப்பின்றி
காத்திருக்கும் பட்டதாரிகள் பலனடைவர்.
கல்வி
பணி அல்லாமல், அலுவலகப்பணியிலும்
கணினி பட்டதாரிகளை நிரப்பலாம். வேலைவாய்ப்பு அறிவிக்காததால், பி.எட்., படிக்கும்
கணினி பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு,
கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு
தகுதித்தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.