தமிழகத்தில், 2,200 அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், கடந்த, 3ம் தேதி துவங்கியது. இந்த ஆண்டு, காலியிடங்கள் மறைக்கப்படாமல்,
இடமாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 325 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பின், காலியாக இருந்த, 517 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 625 பேர் அழைக்கப்பட்டனர்; அதில், 517 பேர், விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றம் பெற்றனர். இதேபோல், 796 துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், விருப்ப இடமாறுதல் உத்தரவு பெற்றுள்ளனர். மேலும், 562 இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்தம், 2,200 ஆசிரியர்கள் இடமாற்றம் உத்தரவு பெற்றுள்ளனர். 2,200 ஆசிரியர்கள் 'டிரான்ஸ்பர்'
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.