Thursday, August 11, 2016
அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவியருக்கு தனி கழிப்பறை.
''அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்ட, 59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆஸ்டின் பேசும்போது, 'பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை' என்றார்.
அதற்கு பதிலளித்து, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: கடந்த, 2014 ஜூலை, 30க்குள், பள்ளிகளில், 100 சதவீதம் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டன. அதில், 2,500 பள்ளிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், பொது கழிப்பறை நடுவே தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களும், மாணவியரும் பயன்படுத்தப்படுவது தெரிந்தது. இந்த பள்ளிகளில், மாணவியருக்கு தனி கழிப்பறை வசதி ஏற்படுத்த, முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, 5,720 பள்ளிகளில், மாணவியருக்கு தனி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டு, மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கேற்ப, கூடுதல் கழிப்பறைகள் கட்டுவதற்காக, 59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும், 100 சதவீதம் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.