WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 26, 2016

6.21 லட்சம் இலவச சைக்கிள்.


நடப்பாண்டு, 6.21 லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 2014 - 15ம் ஆண்டு, 4.23 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, 148.82 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 1.70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, ஆதிதிராவிட மாணவ, மாணவியரையும் சேர்த்து, 3.49 லட்சம் மாணவியர்; 2.71 லட்சம் மாணவர்கள் என, மொத்தம், 6.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.