WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 26, 2016

'நீட்' தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ 'சீட்'.


தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சேரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்'
என்ற, தேசிய நுழைவுத் தேர்வின் முடிவுகள், கடந்த, 16ம் தேதி வெளியிடப்பட்டன. எட்டு லட்சம் பேர் எழுதிய தேர்வில், 4.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும், எந்த அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்படுவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர முடியும்; தேர்ச்சி பெறாதவர்கள் சேர முடியாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'நீட் தேர்வு தேர்ச்சி என்பது, படிப்பில் சேர்வதற்கான தகுதி மட்டுமே. அதுவே, கல்லுாரியில் சேர்வதற்கான, 'மெரிட்' பட்டியல் இல்லை. நீட் தேர்ச்சி இருந்தாலும், தனியார் கல்லுாரிகளின் விதிகளை ஏற்றால் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்கும்' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.